காரணமின்றி காரியம் இல்லை.
எல்லாம் அவன் செயல்.
இறைவா உன்னை அறியும் தகுதி வேண்டும்
நான் எனும் அகம்பாவம் நீங்க வேண்டும்
தன்னைத்தான் அறிதல் வேண்டும்
கனவிலும் நன்மையே விளைய வேண்டும்
வெற்றி தோல்வி சமமென காணும் அறிவும்
அயற்சியற்ற முயற்சியும்
முயற்சியில் தெளிவும்
தெளிவில் மகிழ்ச்சியும்
கொஞ்சமே இங்கு வேண்டும்
வெற்றியில் இறைவன்
தோல்வியில் மானுடம்
மறவாதிருக்கும் வரம் வேண்டும்
No comments:
Post a Comment