Monday, November 22, 2010

செய்யும் தொழிலே தெய்வம்

செல்லரித்து கரையும் தேகம்
புல்லரிக்கவும் வேண்டுமா ?

கனவுகளை மட்டும் விதைத்து
அறுவடை செய்யவும் இயலுமா?

காற்றிலே வார்த்தைகள் தூவி
காவியம் பாடவும் முடியுமா?

வண்ணமின்றி தண்ணீர் கொண்டு
ஓவியம் தீட்டவும் கூடுமோ?

சத்தமின்றி ச்வரங்களுமின்றி
இனிதாய் இசைக்க இயலுமா?

எண்ணங்களைக் குவியலாக்கி
நூதனம் படைக்கவும் முடியுமா?

நிலத்தை, மனதை, மொழியை உழுது
படைக்கும் அமுது ஐம்புலனுக்கும் நல்ல விருந்து.

1 comment: