Tuesday, April 23, 2013

விதி செய்வோம்


தரணியில் தலை சிறந்த என் 
தாய்நாட்டின் தலைநகரம் என 
தனியாகச் சென்றது என் தவறா?

தையலரைத் தாயாய்த் தேவியாய்த்  
தமக்கையாய்த் தங்கையாய்த் 
தமிழன் அன்றித் தலைநகரத்தாரும்
தலையாய்த் தாங்குவர் எனத் 
தவறிழைத்தேனா? 

இவர்களை 
இராட்சதர்கள் எனில் 
இராவணனுக்கு இழுக்கு.

மாக்களாய் மாறியது 
மனிதர்களில் சிலராம்.
இல்லை இல்லை 
புல்பூண்டினும் 
ஈனப்பிறவிகள் 
மனிதப்பதர்கள் இவர்கள்.
பசுவைப் பசிக்குண்ணும் 
புலியொன்றும் பதரல்ல.

பொழுதுபோக்காய்ப் 
போகப்போருளாய்ப் 
பெண்ணை, பிற உயிரை 
அடிமை செய்யும் 
பேயினும் கொடியவர் இவர் 
குலத்திற்குப் பெயரில்லை 
இவர்களைவிட 
இழிந்ததொரு உயிருமில்லை.


ஐந்து வயதுக் குழந்தை 
ஐயோ இது என்ன கொடுமை?
அரற்றவும் இயலவில்லை 
ஆண்டவன் என்று எதுவும் இல்லை !

இனியொரு விதி செய்வோம் -அதை 
எந்த நாளும் காப்போம் 

மனிதர் தம்மை இழிவு செய்யும் 
மடையர்களை மூர்க்கர்களை 
மூடப்பதர்களை 
முச்சந்தியில்- ஒரு 
முன்னுதாரணமாய் 
முன்னறிவிப்பின்றி 
உயிரோடு கொளுத்துவோம் 

சாகவேண்டும் இத்தகைய உயிர்கள் 
வேக வேண்டும் தீயில் இவர்களின் உடல்கள் 
வாழவேண்டும் நிம்மதியாய்ப் பிற உயிர்கள்.
செய்யவேண்டும் கடும் சட்டங்கள்.

தீங்கிழைப்போரை, சக உயிர்க்கு 
இன்னா செய்தாரை ஒறுத்தல் - உலகம்காண
தீயில் கொளுத்திவிடல்.





1 comment:

  1. Very sorry that you had to undergo this. regards, ravichandran.

    ReplyDelete