Saturday, May 11, 2013

தமிழின் பார்வையில் சமஸ்க்ருதம்



நம் உறவு அறிவார் எவருமில்லை.
மலர்களில் நாம் மல்லிகை முல்லை.

நீயும் நானும் இரட்டைப்பிறவி 
தேவகன்னியரில் நாம் அரம்பை ஊர்வசி.
நான் அமுதமொழி, கனியமுதமொழி.
நீயோ தேவமொழி, தேவாமிர்தமொழி.

நாம் இருவருமே மனிதன் தயவில்,
அபாயகரமாய் அழிவின் விளிம்பில்.

நீ அளித்த பதங்கள் 
என் ஆபரணங்கள்.
மெருகூட்டிய அவை 
எனக்கழகூட்டியவை.

என் அருமைச் சகோதரி.
என் உடன்பிறந்தவள் நீ.

ஒரு நாவில் தவழ்கையில் 
நாம் அடையும் உவகையில்,
தளிர்ப்போம் தழைப்போம் 
மிளிர்வோம் வளர்வோம்!!!

2 comments: